Health and Personal Care
Country Cow Ghee
2000 ஆண்டுகளுக்கு முன்பு சித்த மருத்துவத்திலும் ஆயுர்வேத மருத்துவத்திலும் நெய்யை அதிகம் பயன்படுத்தினார்கள்.
மருந்துகள் கெடாமல் பாதுகாக்க நெய் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத் தக்கது.
ஒரு டீஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துகள் உள்ளது. நெய்யில் உப்பு, லேக்டோஸ் சத்து கிடையாது. மீனை போன்று நெய்யிலும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதாக சமீபத்தில் கண்டறிந்திருக்கிறார்கள்.
நெய் சாப்பிடும் போது வயிற்றீல் இருக்கும் அமிலத்தன்மை சமமாகிறது. இவை குடல் பகுதியில் இருக்கும் மியூகஸ் லையனிங்கை உறுதியாக்குகிறது. குடலில் ஏற்படும் புண்களை ஆற்றுகிறது. வயிற்றுப்புண், வீக்கத்தை தடுக்கிறது.
நெய்யில் நீரில் கரையும் வைட்டமின்கள் ஏ, இ உண்டு. இவை கண்களுக்கும் இனப்பெருக்க மண்டலத்துக்கும் உத்வுகிறது.
இதில் இருக்கு வைட்டமின் கே மற்றும் சிஎல்ஏ *(CLA – Conjugated Linoleic Acid)* என்னும் ஆன்டி ஆக்ஸிடெண்ட் நிறைந்திருக்கிறது.
இவை உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.
உடலுக்கு நல்ல கொழுப்பு தரக்கூடிய சாச்சுரேட் கொழுப்பு நெய்யில் உண்டு. பால் ஒவ்வாமையை தரும் என்பவர்கள் கூட நெய்யை தவிர்க்காமல் எடுத்துகொள்ளலாம்.
*குறிப்பாக* குழந்தைகளுக்கு நெய் சேர்த்த உணவை தரும் போது அவர்களுக்கு நினைவுத்திறன் அதிகரிக்கிறது. மனதில் பயம் , பதட்டம் போன்றவற்றை வரவிடாமல் செய்வதோடு உடல் மந்தத்தை விரட்டி அடிக்கிறது.
சோம்பலை குறைத்து சுறுசுறுப்பை உண்டாக்குகிறது.
மூளையின் நரம்புகளை சுறுசுறுப்பாக வைக்க துணைபுரிகிறது.
பசி உணர்வை தூண்டவும் பயன்படுகிறது.
மூட்டுகளை வலுப்படுத்தவும் ,புற்று நோய் செல்களை அழிக்கவும் உதவுகிறது.
நெய் சருமத்தில் பளபளப்பை கூட்டவும் உதவுகிறது.
நெய் உடல் பருமனை உண்டாக்கிவிடும் என்று சிலர் நினைப்பதுண்டு. ஆனால் காலையில் ஒரு டீஸ்பூன் நெய் வெறும் வயிற்றில் எடுப்பதால் உடலின் மெட்டபாலிசம் அளவு தூண்டப்பட்டு உடல் எடை குறைய செய்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
*கெட்டு போகாத நெய்*
பொதுவாக எண்ணெய் வகைகளை சூடேற்றும் போது அதனுடைய வெப்ப நிலையில் மாற்றம் உண்டாகும்.
இவை உடலுக்கு ஏற்புடையதல்ல.
ஆனால் நெய்யை எவ்வளவு சூடாக்கினாலும் அதன் தன்மை சிறிதும் மாறாது.
482 டிகிரி பாரன் ஹீட்டுக்கு மேல் சூடாக்கினாலும் அதன் தன்மை மாறாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டு முழுவதும் செக்கில் ஆட்டிய எண்ணெயை வைத்து பாதுகாப்பது போல் நெய்யையும் வருடக்கணக்காக வைத்திருந்து பயன்படுத்தலாம்.
ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் இதனு டைய பயன்கள் அப்படியே முழுமையாக கிடைக்கும்.
அதனால் தான் மருத்துவத்துறையில் நெய் பயன்பாடு இருந்ததை உணரலாம்.
நெய் எப்போது பயன்படுத்தலாம்
நெய் அன்றாட உணவில் பயன்படுத்தும் போது பலன் பெறலாம் என்பதற்கேற்ப அதை பயன் படுத்தும் நேரமும் உண்டு என்கிறார்கள். தினமும் மதிய வேளையில் பயன்படுத்துவதான் சிறந்தது.
ஒரு வயது குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை உணவில் நெய் சேர்த்துகொள்ளலாம். ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த குளிர்ந்த உணவில் நெய் சேர்த்து சாப்பிடக்கூடாது. சூடான அல்லது மிதமான சூட்டில் இருக்கும் சாதம், சாம்பார், குழம்பு வகையில் சேர்த்து சாப்பிடலாம். நெய்யை உப்பு சேர்த்து பயன்படுத்த வேண்டும். பெரும்பாலும் தோசை, பொங்கல் உணவுகள் காலை / இரவு செய்யும் போது அதில் நெய் சேர்க்க கூடாது.
குழந்தைகளுக்கு கொடுக்கும் போது பருப்பு உணவோடு சேர்த்து கொடுக்கலாம்.
ஜீரணக்கோளாறு பிரச்சனை இருப்பவர்கள், வயிறு தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள், வாய்வு தொல்லைக்கு உள்ளானவர்கள் நெய்யை அதிகம் சேர்க்க வேண்டாம்.
எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது நெய் வாங்குவது.
நெய் பார்க்கும் தயாரிக்கும்போது வெண்ணெய் உருக்கி காய்ச்சும் போது மணம் வீசும். கொழகொழப்பு தன்மையோடு இருக்காது.
*ஒரு ஸ்பூன் நெய்யை காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் உண்டாகும்?
காலை எழுந்ததும் நம்மில் நிறைய பேருக்கு ஏதாவது சூடாகக் குடிக்க வேண்டும் என்று தோன்றும். பலருக்குக் காபி குடிக்க வேண்டும். அதற்கு அடுத்ததது தான் மற்ற வேலைகளே ஓடும். இன்னும் கொஞ்சம் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பவர்கள் காலையில் வெந்நீர் அல்லது வெந்நீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு, தேன் சேர்த்துக் குடிப்பதுண்டு. ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா? காலையில் தூங்கி எழுந்ததும் அரை ஸ்பூன் நெய்யை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உங்களுடைய உடலில் நிறைய நல்ல மாற்றங்கள் தெரியும்
நெய் மிக அதிக அளவில் ஒமேகா3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டிருக்கிறது. அதோடு வைட்டமின் ஏ நிறைந்தது. பிட்யூ்ரிக் அமிலம் நிறைந்த ஓர் உணவுப் பொருள் என்றால் அது நெய் தான். மேலும் இதில்,
அதேபோல நெய்யில் வைட்டமின், ஈ மற்றும் டி அதிக அளவில் இருக்கிறது. அதோடு மிக சில உணவு வகைகளில் மட்டுமே இருக்கிற லினோலிக் அமிலம் நெய்யில் மிக அதிக அளவில் இருக்கிறது.
1 டீஸ்பூன் நெய்யில் கிட்டதட்ட 112 கலோரிகள் இருக்கின்றன.
அதோடு
மொத்த கொழுப்பின் அளவு – 14 கிராம்.
புரதம் – 0.04 கிராம்
வைட்டமின் ஏ – 438 IU
வைட்டமின் டி – 15 மி.கி
வைட்டமின் கே – 1.2 மி.கி
கோலின் சத்து – 2.7 மி.கி
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் – 45 மி.கி
ஒமேகா 6 கொழுப்பு அமிலம் – 2.7 மி.கி
ஆகிய ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றன.
*ஆயுர்வேதத்தில் நெய்:*
ஆயுர்வேதத்தில் நெய் மருத்துவம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
நெய்யோடு மருத்துவ மூலிகைகள் சேர்த்து பயன்படுத்தும் சிகிச்சை முறைகள்
*1.சிரோதாரை (தலையில்/நெற்றியில் பயன்படுத்துவது)*
*2.நேத்ர தர்ப்பணம் (கண்ணில் பயன்படுத்துவது)*
*3.நசியம் (மூக்கில் பயன்படுத்துவது)*
ஆயுர்வேத உணவு முறையில் நெய்க்கு மிக முக்கிய இடமுண்டு. அனைவரும் தினசரி உணவில் ஒரு ஸ்பூன் அளவாவது நெய் சேர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
அப்படி தினசரி உணவில் நெய் சேர்த்துக் கொள்வதால் உடலில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன. அதனால் செல்கள் புத்துணர்ச்சியடைந்து நாள் முழுக்க உற்சாகமாகச் செயல்பட உதவுகிறது. பல ஆயுர்வேத மருந்துகள் நெய், தேன் ஆகியவற்றோடு தான் சேர்த்து சாப்பிட வேண்டும். அந்த அளவுக்கு நெய் முக்கியத்துவம் வாய்ந்த உணவு.
நீண்ட காலம் ஆரோக்கியமா வாழணும்னா ஆயுர்வேத முறைப்படி உங்க உணவுப் பழக்கத்தை இப்படி மாத்துங்க
*மூட்டுவலிக்கு*
வயதாக, வயதாக எலும்புகள் தேய்மானம் அடையும். எலும்பு மஜ்ஜைகளில் உள்ள ஈரத்தன்மை குறைய ஆரம்பிக்கும். இதன் காரணமாகத் தான் 40 வயதுக்கு மேல் மூட்டுவலி வந்து பாடாய் படுத்துகிறது. ஆனால் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தினமும் சிறிது நெய் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி பிரச்சினையே இருக்காது. ஏனெனில் இயற்கையாகவே நெய் தசைகளுக்கிடையே ஒரு லூப்ரிகண்ட் போல செயல்படும் தன்மை கொண்டது. நெய்யில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்திருப்பதால் இது மூட்டு வலி, ஆர்த்ரிடிஸ், ஆஸ்டியோபோராசிஸ் போன்ற எலும்புகள் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்க உதவும்.
*சருமம் பளபளக்க:*
சருமப் பிரச்சினை உள்ளவர்கள் குறிப்பாக, சருமம் அதிக வறட்சியுடன் இருப்பவர்கள் நெய்யை தங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் வீதம் நெய் சாப்பிட்டு வந்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சரும செல்கள் புதுப்பிக்கப்படும். தோலில் மெலனின் உற்பத்தியை அதிகரிக்க நெய் மிகச்சிறந்த இயற்கைப் பொருளாக விளங்குகிறது. அதோடு நெய்யில் உள்ள கொழுப்பு அமிலங்களும் புரதங்களும் சருமத்தை பளபளப்பாகவும் பொலிவாகவும் வைத்திருக்க உதவுகிறது. அதோடு சரும நோய்களை அண்டவிடாமல் பார்த்துக் கொள்வதில் நெய் மிகச்சிறப்பாகச் செயல்படுகிறது.
*ஞாபகத் திறன் அதிகரிக்க:*
வல்லாரை எப்படி ஞாபக சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டதோ அதேபோல, நெய்யும் மூளையின் செயல்பாட்டைத் தூண்டி சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டது. படிக்கும் குழந்தைகளுக்கு காலையில் எழுந்ததும் அரை ஸ்பூன் சுத்தமான பசு நெய்யை வெறும் வயிற்றில் சாப்பிடக் கொடுத்து வாருங்கள். மிக விரைவிலேயே அவர்களுடைய ஞாபகத் திறன் மேம்பட்டிருப்பதைப் பார்ப்பீர்கள்.
நெய் மூளையில் உள்ள செல்களைத் தூண்டி, நரம்புகளைச் செயல்பட வைக்கும் வேலையைச் செய்கிறது.
சிறுவயதிலேயே இப்படி நெய்யை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடப் பழகினால், வயதான பின்பு வரும் டிமென்ஷியா, அல்சைமர் போன்ற ஞாபகத் திறன் குறைபாடு, ஞாபக மறதி பிரச்சினைகள் வராமல் தடுக்க முடியும்.
*புற்றுநோய் செல்களை அழிக்க:*
நெய்க்கு இயற்கையிலேயே புற்றுநோய் செல்களைச் செயல்படாமல் செய்யவும் அதை அழிக்கும் தன்மையையும் கொண்டிருக்கிறது.
நெய்யை தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரும்போது உடலில் உள்ள ரத்த செல்கள் புத்துணர்ச்சி பெறுவதாலும் இயல்பாகவே செல்கள் புதுப்பிக்கப்படுவதாலும் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.
*தலைமுடிக்கு நெய்:*
தலைமுடிக்கு நெய் தடவி வந்தால் தலைமுடி உதிர்வது நிற்கும். முடி வளர்ச்சி அதிகரிக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். ஆம். தலைமுடி மற்றும் நகங்கள் புரதங்களால் ஆனவை. அதற்கான ஊட்டச்சத்துக்களும் அதிக அளவு புரத உணவுகளில் இருந்து தான் கிடைக்கும். அதனால் தான் முடி உதிர்தலைத் தடுக்க புரத உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்ள பரிந்துரை செய்யப்படுகிறது.
காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதையும் அதேபோல வாரத்தில் ஒரு நாள் தலைமுடிக்கு நெய் தேய்த்து ஊறவிட்டு குளித்தும் வந்தாலே போதும். உங்கள் தலைமுடி உறுதியாகவும் நன்கு அடர்ந்த கருமையாக பளபளப்பாக மாறுவதை உணர்வீர்கள். குறிப்பாக முடி உதிர்தல் படிப்படியாக குறைந்து முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
*செரிமானப் பிரச்சினை:*
வயிறு உப்பசம், வாயுத் தொல்லை மற்றும் அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு நெய்யை அருமருந்து என்றே கூறலாம். காலை எழுந்ததும் பால், காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் பாலில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறைவதோடு, குடல் புண்கள் ஆற்றும் சக்தி கொண்டது. அஜீரணக் கோளாறை நீக்கி, செரிமான சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
*மூக்கடைப்பு பிரச்சினை:*
குளிர் காலங்களில் காலையில் தூங்கி எழுந்ததும் பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சினை தொண்டைக் கட்டும் மூக்கடைப்பும் தான். இந்த பிரச்சினையை தொடர்ந்து கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால் அது நாளடைவில் சைனஸாக உருவெடுக்கும்.
இத்தகைய பிரச்சினை உள்ளவர்கள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய்யை சாப்பிட்டு விட்டு சிறிது வெந்நீர் குடிக்க தொண்டைக் கட்டு பிரச்சினை சிறிது நேரத்திலேயே சரியாகும். அதேபோல ஓரிரு துளிகள் நெய்யை லேசாக சூடுசெய்து மூக்கு துவாரங்களில் விட *(நசியம் என்ற ஆயுர்வேத மருத்துவ முறை)* மூக்கடைப்பு, சைனஸ் தொந்தரவு குறையும்.
*கொழுப்பு அமிலங்கள்:*
நெய் இயற்கையாகவே நிறைய அமினோ அமிலங்கள் நிறைந்தவை. அதோடு ஒமேகா 3 மற்றும் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருப்பதால் இது உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும் ஆற்றல் கொண்டது. சிலர் உடல் மெலிதாக இருக்கும். ஆனால் தொப்பை மட்டும் பெரிதாக இருக்கும். அப்படி இருப்பவர்கள் காலையில் வெறும் வயிற்றில் சிறிது நெய் சேர்த்து வர நல்ல பலன் கிடைக்கும்.
தேவைக்கு அழைக்கவும்
9080092487
9842309798
http://www.Pondybasket.com
₹2,600.00 ₹2,000.00Add to cart